தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

All the Best: 11ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவ-மாணவிகள் கூறியது என்ன? - 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத் தேர்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு தொடங்குகிறது, ஏறத்தாழ 7 லட்சத்து 88 ஆயிரம் மாணவ மாணவிகள் இந்த தேர்வை எழுத உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 14, 2023, 7:23 AM IST

Updated : Mar 14, 2023, 12:21 PM IST

11ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத் தேர்வு துவங்கியது

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பொதுத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 7 லட்சத்து 88 ஆயிரத்து 64 மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். அதுபோக தனித் தேர்வர்களாக 5 ஆயிரத்து 338 பேர் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் தேர்வுப் பணியில் ஈடுப்படும் ஆசிரியர்களுக்கான அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. பறக்கும் படையில் பணி அமர்த்தப்படும் ஆசிரியர்கள், பணியின்போது தேர்வர்களை அச்சமுறும் வகையில் செயல்படக்கூடாது. தேர்வு மையத்தில் யாரும் செல்போன்களை பயன்படுத்த கூடாது. தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபடும் அலுவலர்களும் செல்போன் பயன்டுத்த கூடாது.

அவர்கள் தங்களின் செல்போன்களை ஆப் செய்து, தேர்வு மையத்திற்கான கட்டுப்பாட்டு அறையில் வைத்து விட்டு செல்ல வேண்டும். அதனையும் மீறி தேர்வு அறையில் செல்போன் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட அறிவுறைகள் வழங்கப்பட்டு உள்ளன.

தேர்வர்களின் மனநிலை, உடல்நிலை, தேர்வெழுதும் நேரம் பாதிக்காத வகையில் ஆசிரியர்கள் செயல்படுதல் வேண்டும். தேர்வர்கள் கண்ணியமாக நடத்தப்படுதல் வேண்டும். சந்தேகத்திற்குரிய தேர்வர்களிடம் மட்டும் சோதித்தல் போதுமானது. அனைவரையும் சோதித்தல் அவசியம் இல்லை என பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

காலையில் 10 மணிக்கு மாணவர்களுக்கு கேள்வித்தாள் வழங்கி படிக்க அறிவுறுத்தவும், காலை 10 மணி 10 நிமிடத்திற்கு விடைத்தாள் கொடுத்து அதனை பூர்த்திச் செய்ய கூற வேண்டும். காலை 10 மணி 15 நிமிடத்திற்கு தேர்வுகள் துவக்கப்பட்டு, மதியம் 1 மணி 15 நிமிடம் வரையில் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டு பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 60 ஆயிரத்து 908 மாணவர்கள், 4 லட்சத்து 12 ஆயிரத்து 779 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு தமிழகம் முழுவதும் 3,224 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

அதேபோல் புதுச்சேரியில் 6 ஆயிரத்து 799 மாணவர்கள், 7 ஆயிரத்து 577 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 376 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 40 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தனித் தேர்வர்களாக 2 ஆயிரத்து 356 மாணவர்களும், 2 ஆயிரத்து 979 மாணவிகளும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும் என 5 ஆயிரத்து 338 பேர் 135 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.

மாற்றுத்திறனாளிகளில் 3 ஆயிரத்து 228 மாணவர்களும், 2 ஆயிரத்து 607 மாணவிகளும் என மொத்தம் 5 ஆயிரத்து 835 பேர் இன்று தேர்வு எழுத உள்ளனர். சிறைவாசிகள் 125 பேர் வேலூர், கடலூர், சேலம், கோயம்புத்தூர், மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறைகளில் உள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுத உள்ளனர்.

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள், தேர்வர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் குறித்து தெரிவிக்க அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேர தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறையினை 94983 83081, 94983 83075 ஆகிய எண்களில் தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க:12ஆம் வகுப்பு மொழி தேர்வு எழுத வராத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு!

Last Updated : Mar 14, 2023, 12:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details