பாட்னா(பீகார்): அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. சீனாவில் கட்டுக்கடங்காத அளவில் கரோனா பாதிப்பு ஏற்படுவதாகவும், போதிய மருத்துவ வசதிகளின்றி மக்கள் செத்து மடிந்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
உலக நாடுகளில் கரோனா பரவல் அதிகரித்து வருவதை அடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பொது வெளியில் மக்கள் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் சூழலுக்கு ஏற்ப கட்டுப்பாட்டு விதிகளில் மாற்றம் கொண்டு வந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிறுத்தி உள்ளது.
இதையடுத்து பல்வேறு மாநிலங்களில் பொது வெளியில் மக்கள் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச விமான நிலையங்களில் சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.