தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மைசூரு தசரா கொண்டாட்டம் - யானைகளுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

மைசூரு தசரா - 2022 திருவிழாவையொட்டி, அரண்மனைக்கு அணிவகுத்து வந்த யானைகளுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

மைசூரு தசரா கொண்டாட்டம் - யானைகளுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!
மைசூரு தசரா கொண்டாட்டம் - யானைகளுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

By

Published : Aug 11, 2022, 9:05 AM IST

மைசூரு (கர்நாடகா):மைசூர் தசரா- 2022 திருவிழாவிற்காக ‘அபிமன்யு’ யானை தலைமையிலான யானைகள் குழு மைசூரு அரண்மனைக்கு வந்தடைந்தது. இந்த யானைகள், தங்களது முகாமில் இருந்து கடந்த ஜூலை 7 ஆம் தேதி மைசூருக்கு புறப்பட்டன. மூன்று நாட்கள் ஆரண்ய பவனில் ஓய்வெடுத்த பிறகு, ஊர்வலமாக அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டது.

மைசூரு அரண்மனையின் ஜெயமார்த்தாண்ட வாசல் அருகே பூஜை செய்து பூரண கும்ப வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அபிமன்யு யானை தலைமையிலான அணியில், அர்ஜுனன், கோபாலசுவாமி, தனஞ்ஜெயா, பீமா, மகேந்திரன், காவேரி, சைத்ரா மற்றும் லட்சுமி ஆகிய யானைகள் இருந்தன.

மைசூரு தசரா கொண்டாட்டம் - யானைகளுக்கு பிரம்மாண்ட வரவேற்பு!

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.டி.சோமசேகர், யானைகளுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வழங்கி, தசரா விழா சிறப்பாக நடைபெற அலுவலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். நவராத்திரி எனப்படும் மைசூரு தசரா செப்டம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது.

ஜம்புசவரி அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறும். இம்முறை தசரா திருவிழாவில் 14 யானைகள் பங்கேற்கவுள்ளன. அதில் 10 ஆண் யானைகளும், 4 பெண் யானைகளும் இடம்பெறவுள்ளன. ஜம்பூசவாரி நிகழ்வானது, அபிமன்யு யானையின் தலைமையில் நடைபெறும்.

இதையும் படிங்க:லாரியை நகர விடாமல் தடுத்து நிறுத்தி கரும்பை ருசி பார்த்த யானை...

ABOUT THE AUTHOR

...view details