ராஞ்சி:ஜார்க்கண்ட் மாநிலத்தில் நேற்று (பிப்.21) மதியம் வரை 14 பேர் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளனர். இது குறித்து முதன்மை தலைமை வன பாதுகாவலர் ஷசீகர் சமந்தா கூறுகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹஜாரிபாக்கில் ஒரே யானை தாக்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவை அருகில் உள்ள சாத்ரா வனப் பகுதியில் இருந்து வந்ததாகவும் கூறினார்.
மேலும் இட்கி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் 4 பேர் யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவித்தார். இது மட்டுமில்லாமல் ஹஜாரிபாக், சத்ரா, லடேஹர், லொஹார்டகா மற்றும் ராஞ்சி ஆகியப் பகுதிகளில் மொத்தமாக 14 பேர் காட்டு யானை தாக்கி உயிரிழந்த நிலையில், இட்கி பகுதிக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.
அதேநேரம் இந்த தடை உத்தரவை அனைத்து மக்களும் பின்பற்றுமாறும், மீறினால் நடவடிக்கை எடுக்கவும் ராஞ்சி வனத்துறையினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். பொதுவாகவே, யானைக் கூட்டத்தில் இருந்து பிரிந்து வரும் ஒற்றை யானையால் என்ன செய்வதென்று தெரியாமல் குடியிருப்புக்குள் நுழையும் என்றும், அதனை பொதுமக்கள் கற்களால் அடித்து துன்புறுத்துவதால் யானைக்கு கோபம் அதிகமாக வரும் எனவும் வனத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.