மத்தியப்பிரதேசம் :மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள சிவ் பீகார் காலனியில் வசித்து வருபவர், சஞ்சீவ் கனக்னே. இவருக்கு ரூ.3,419 கோடி மின்கட்டணம் செலுத்த வேண்டும் என குறுஞ்செய்தி வந்துள்ளது. இந்த மிகப்பெரிய தொகையைக் கண்ட அவரது குடும்பம் அதிர்ச்சியில் உறைந்தது.
இதனையடுத்து சஞ்சீவ் மின்சாரத் துறையை தொடர்பு கொண்டு, " மின் கட்டணம் ரூ.3,000 கோடிக்கு மேல் உள்ளது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மின்சார துறையினர், கட்டணத்தை திருத்தம் செய்து சுமார் ரூ.1,300 என நிர்ணயம் செய்தனர். இது அலுவலர்களின் தவறு எனவும், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.