தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Punjab Assembly Polls: கல்லூரி மாணவிகளுக்கு எலக்ட்ரானிக் ஸ்கூட்டர்! - Punjab Assembly Polls

பஞ்சாப்பில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கல்லூரி மாணவிகளுக்கு எலக்ட்ரானிக் பைக் வழங்கப்படும் எனத் தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Navjot Singh Sidhu
Navjot Singh Sidhu

By

Published : Jan 22, 2022, 7:03 PM IST

சண்டிகர் : பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் “லூதியானாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கல்லூரி செல்லும் பெண்களுக்கு வழங்கப்படும்” என்று சனிக்கிழமை (ஜன.22) வாக்குறுதி அளித்தார்.

பஞ்சாப் சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, இன்று (ஜன.22) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “காங்கிரஸின் “பஞ்சாப் மாடல்' எங்களது தேர்தல் அறிக்கையில் ஒரு பகுதியாக இருக்கும், ஏனெனில் நான் பஞ்சாப் காங்கிரஸின் தலைவர், ஒரு தெருவின் தலைவர் அல்ல.

பஞ்சாப் மாநிலத்தின் பொருளாதாரத்தை புதுப்பிக்க, லூதியானா மாநிலம் முழுவதும் தனித்துவமான வணிக அடிப்படையிலான தொழில்துறை நகரங்கள் உருவாக்கப்படும்.

தகவல் தொழில்நுட்ப மையமாக லூதியானா, மொஹாலி ஆகியவையும், உருக்காலை மையமாக கபுர்தலா, படாலா ஆகிய இடங்களும், உணவு பதப்படுத்தும் மையமாக பாட்டியாலா, ஃபுல்ஹாரி ஆகிய பகுதிகளும், மருத்துவ மற்றும் மத சுற்றுலா மையமாகங்களாகவும் அமிர்தசரஸ் திகழும் என்றார்.

மேலும், ஜவுளி மற்றும் விவசாய உபகரணங்கள் தயாரிப்பும் மேம்படுத்தப்படும் என்று கூறினார். மேலும், “சவால் விடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டல் விடுக்கும் கேப்டன் அமரீந்தர் சிங் போல் நான் இல்லை” எனவும் கூறினார்.

பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு பிப்.20ஆம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் தரப்பில் 31 வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளராக நகைச்சுவை நடிகர் பகவத் மான் சிங் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பஞ்சாப்பில் காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம், கேப்டன் அமரீந்தர் சிங் கட்சி, பாஜக, ஆம் ஆத்மி என பன்முனை போட்டி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : Punjab Assembly Polls:பஞ்சாப் மாநிலத் தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக பகவத் மண் தேர்வு

ABOUT THE AUTHOR

...view details