புதுடெல்லி: தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்பட 15 மாநிலங்களில் காலியாகவுள்ள 57 மாநிலங்களவை இடங்களுக்கு வரும் ஜூன் 10ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
உத்தரப் பிரதேசத்தில் காலியாகவுள்ள 11 இடங்களில் 7இல் பாஜகவும், 4இல் சமாஜ்வாதியும் வெற்றி பெற வாய்ப்புள்ளன. இதற்கிடையில் தற்போதைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், முக்தார் அப்பாஸ் நக்வி மற்றும் பியூஷ் கோயல் ஆகியோர் மீண்டும் மாநிலங்களவைக்கு (ராஜ்யசபா) தேர்வாகவுள்ளனர்.
அதேபோல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மூத்தத் தலைவர் விஜய் சாய் ரெட்டியும் மீண்டும் தேர்வாகவுள்ளார். இதற்கிடையில் மகாராஷ்டிராவில் இருந்து தேர்வான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரபுல் பட்டேல், சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ரவுத் ஆகியோரின் பதவிக்காலமும் வரும் ஜூன் 4ஆம் தேதியோடு நிறைவடைகிறது.