உத்தரப் பிரதேசம், கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று(மார்ச்.10) காலை 8 மணிக்கு தொடங்கியது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது. மீதமுள்ள உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய நான்கு மாநிலங்களிலும் பாஜக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
தேர்தல் முடிவுகள் 2022: நான்கு மாநிலங்களில் பாஜக முன்னிலை - Uttar Pradesh Election Results 2022
உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் மாநிலங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்துவருகிறது.
election-results-2022-bjp-leads-in-uttar-pradesh-goa-uttarakhand-manipur
அதன்படி பாஜக உத்தரப் பிரதேசத்தில் 206 இடங்களிலும், உத்தரகாண்டில் 39 இடங்களிலும், கோவாவில் 19 இடங்களிலும், மணிப்பூரில் 46 இடங்களிலும் முன்னிலை வகித்துவருகிறது. உத்தரப் பிரதேசத்தில் பாஜகாவிற்கு அடுத்தப்படியாக சமாஜ்வாதி கூட்டணி 116 இடங்கள் முன்னிலையில் உள்ளது. உத்தரகாண்டில் காங்கிரஸ் 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இதையும் படிங்க:வெற்றி எங்களுக்கு ஜிலேபி உங்களுக்கு... பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆர்ப்பரிப்பு...