தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மீண்டும் சிக்கலில் ராகுல் காந்தி! சர்ச்சை பேச்சு விவகாரத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு! தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை என்ன? - ராகுல் காந்தி பிக்பாக்கெட் மோடி உயர்நீதிமன்றம்

rahul gandhi pickpocket speech against PM Modi : பிரதமர் மோடியை பிக்பாக்கெட் என விமர்சித்த விவகாரத்தில் ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு குறித்து 8 வாரங்களில் முடிவு எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

Rahul Gandhi
ராகுல் காந்தி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 21, 2023, 4:28 PM IST

டெல்லி : ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு கடந்த நவம்பர் 22ஆம் தேதி பரத்பூர் பகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "பிக்பாக்கெட்டுகள் எப்போதும் தனியாக வருவதில்லை என்றும் எப்போதும் குழுவாக வருகிறார்கள் என்றும் கூறினார்.

ஒருவர் பொது மக்களின் கவனத்தை திசை திருப்பும் போது, மற்றொருவர் பின்னாலில் இருந்து பாக்கெட்டை வெட்டி விடுவார் என்று கூறினார். மக்களின் கவனத்தை திசை திருப்ப தொலைகாட்சியில் பிரதமர் மோடி முன்பக்கத்தில் வருகிறார் என்றும் அதானி பின்னால் வந்து மக்கள் பணத்தை எடுக்கிறார் என்றும் ராகுல் காந்தி தெரிவித்து இருந்தார்.

பிக்பாக்கெட்டுகள் தனியாக வருவதில்லை, அப்படி அவர்கள் தனியாக வந்தால் உங்கள் பாக்கெட்டை வெட்ட முடியாது என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். மூன்று பேர் கொண்ட குழுவாகவே பிக்பாக்கெட்டுகள் வருவர் என்றும் ஒருவர் முன்பக்கமும், ஒருவர் பின்புறமும், மற்றொருவர் தூரத்திலும் இருந்தும் கவனத்தை திசை திருப்பி பணத்தை கொள்ளையடிப்பர் என்றும் ராகுல் காந்தி விமர்சித்தார்.

மக்களின் கவனத்தை திசை திருப்புவது பிரதமர் மோடியின் வேலை என்றும் அவர் முன் நின்று தொலைக்காட்சியில் தோன்றி இந்து-இஸ்லாமியர்கள் பிரச்சினை, பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்ற விஷயங்களை எழுப்பி பொது மக்களை திசை திருப்புகிறார் என்றார். இதற்கிடையே, அதானி பின்னால் வந்து பணத்தை எடுத்து செல்வதாகவும் ராகுல் காந்தி கூறினார்.

இருவருக்கும் இடையில் யாராவது வருகிறார்களா என தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவர் அமித் ஷா என்றும் அப்படி வந்தால் அவர்களை தடியடி நடத்தி அடிப்பார்" என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். இந்த பேச்சு கடும் சர்ச்சையானது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், ராகுல் காந்தியின் கருத்து முகச் சுழிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறியது. மேலும், இந்த சர்ச்சை பேச்சு விவகாரத்தில் ராகுல் காந்தி மீது 8 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் எனக் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படிங்க :தலைமை தேர்தல் ஆணையர் நியமன மசோதா - மக்களவையில் நிறைவேற்றம்!

ABOUT THE AUTHOR

...view details