தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து தற்போது உச்சத்தை கடந்துள்ளது. இந்நிலையில், வழக்கு விசாரணை ஒன்றில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலைக்கு தேர்தல் ஆணையமே முக்கியக் காரணம், இதற்காக கொலை வழக்கே பதிவுசெய்யலாம் என கருத்து தெரிவித்திருந்தார்.
நீதிபதியின் இந்தக் கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலை வழக்கு பதிவு செய்யலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.