தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தேர்தல் பேரணிகளுக்கு ஜன.31 வரை தடை! - 5 மாநில தேர்தல்

5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பேரணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஜன.31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Election Commission
Election Commission

By

Published : Jan 22, 2022, 8:13 PM IST

டெல்லி : உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைக்கு அண்மையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக சாலை பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை தற்போது ஜன.31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்க 10 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசியல் கட்சிகள் காணொலி வாயிலாக மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட முடிவெடுத்துள்ளன. முன்னதாக பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் டிஜிட்டல் வாயிலான காணொலி பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

5 மாநில தேர்தல் முடிவுகள் மார்ச் 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள உத்தரப் பிரதேசத்தில் பிப்.10ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 பேருக்கு கரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இது நேற்றைய நாளை காட்டிலும் 9 ஆயிரத்து 550 அதிகமாகும். மேலும் நேற்று 2 லட்சத்து 42 ஆயிரத்து 676 பேர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழப்புகள் 488 ஆக உள்ளன. தற்போதுவரை 21 லட்சத்து 13 ஆயிரத்து 365 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். கரோனா பரவல் விகிதம் 17.22 ஆக உள்ளது.

இதையும் படிங்க : 50 லட்சம் தொண்டர்கள்.. டிஜிட்டல் பேரணிக்கு தயாராகும் பாஜக!

ABOUT THE AUTHOR

...view details