மயூர்பஞ்ச் (ஒடிசா):ஒடிசாவின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஊடாலா தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதியவர் ஒருவர் சூனியம் செய்வதாகக் கருதி அவரது உறவினர்களால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர் குந்தா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சரஜாமஹிதி கிராமத்தில் வசிக்கும் துங்குருசிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துங்குருவின் மனைவி குருபாரி சிங் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கால்பந்து போட்டியைக் காண வெளியில் சென்றிருந்தனர். அவர்கள் வீடு திரும்பிய போது துங்குரிவின் உடல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் வீட்டின் வராண்டாவில் கிடந்துள்ளது.