தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிவசேனாவிலிருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கம் - உத்தவ் தாக்கரே!

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சிவசேனா கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஏக்நாத் ஷிண்டே நீக்கப்பட்டுள்ளார்.

eknath
eknath

By

Published : Jul 2, 2022, 5:27 PM IST

மும்பை: மகாராஷ்டிரா அமைச்சராக இருந்த ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 40 சிவசேனா எம்எல்ஏக்கள், உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். அதன் எதிரொலியாக உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் பாஜகவின் ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார்.

எதிர்க்கட்சி தலைவராக இருந்த முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், சிவசேனாவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஏக்நாத் ஷிண்டே நீக்கப்பட்டுள்ளதாக, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஷிண்டே நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: "தம் பிரியாணி, இரானி தேனீரை சுவைக்க மறக்காதீர்கள்" - பாஜக தலைவர்களை கலாய்த்த கே.டி. ராமாராவ்!

ABOUT THE AUTHOR

...view details