டெல்லி:நொய்டாவில், 85 வயதான முன்னாள் விங் கமாண்டர் தனது i10 காரில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினார். நொய்டாவில் செக்டார் 25 என்னும் பகுதியருகே விங் கமாண்டர் காரை இயக்கிக்கொண்டு சென்றபோது, அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து, இரண்டு கார்கள் மற்றும் ஸ்கூட்டி ஆகியவற்றில் மோதி, இறுதியாக ஒரு சுற்றுச்சுவரில் மோதி நின்றது.
நொய்டாவில் தீப்பிடித்து எரிந்த கார் - நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 85 வயது விங் கமாண்டர் - पूर्व विंग कमांडर की कार में लगी आग
புதுடெல்லி: நொய்டாவில், 85 வயதான முன்னாள் விங் கமாண்டர் காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது.
![நொய்டாவில் தீப்பிடித்து எரிந்த கார் - நல்வாய்ப்பாக உயிர் தப்பிய 85 வயது விங் கமாண்டர் நொய்டாவில் 3 வாகனங்களை தாக்கிய 85 வயது முன்னாள் விங் கமாண்டர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-16695325-thumbnail-3x2-noida.jpg)
நொய்டாவில் 3 வாகனங்களை தாக்கிய 85 வயது முன்னாள் விங் கமாண்டர்
அதையடுத்து கார் தீப்பிடித்து முற்றிலும் எரிந்தது.இதில் நல்வாய்ப்பாக, முன்னாள் விங் கமாண்டர் உயிர் தப்பினார். காயமடைந்த நிலையில் வாகனத்தில் இருந்து இறங்கிய, அவரை அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் இதுவரை எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நொய்டாவில் 3 வாகனங்களை தாக்கிய 85 வயது முன்னாள் விங் கமாண்டர்