புனே(மகாராஷ்டிரா): மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று (மே 20) நடந்த இருவேறு சம்பவங்களில் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் உள்ள போர் தெஹ்சிலில் உள்ள பட்கர் அணையின் உப்பங்கழியில்(கடலுடன் ஆறு இணையும் இடம்) வியாழக்கிழமை அன்று நான்கு பெண்கள் மூழ்கி இறந்ததாக அம்மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் மற்றொரு பெண் இப்பகுதியில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. காணாமல் போன பெண்ணைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.முன்னதாக குடும்ப விழா ஒன்றில் பங்கேற்பதற்காக புனே மாவட்டத்தில் உள்ள நரேகான் கிராமத்திற்குச் சென்ற அந்தப் பெண், மாலையில் பட்கர் அணையின் உப்பங்கழியில் நீராடச் சென்றதாக புனே கிராமப்புற காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். காணாமல் போன பெண்ணைத்தேடும் பணியில் இருந்தபோது 19 முதல் 23 வயதுக்குட்பட்ட நான்கு பெண்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக அக்காவல் அலுவலர் தெரிவித்தார்.