இடுக்கி:கேரள மாநிலம் குமளி-கம்பம் சாலையில் நேற்றிரவு (டிசம்பர் 23) 11 மணியளவில் சபரிமலை பக்தர்கள் சென்ற கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் தமிழர்கள் 8 பேர் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த காரில் குழந்தை உள்பட 12 பேர் இருக்காலம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த 2 பேரும் குமளியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்துவருகிறது. இடுக்கி மாவட்ட ஆட்சியர் மீட்புப் பணியை நேரடியாக கவனித்துவருகிறார். முதல்கட்ட தகவலில் உயிரிழந்தவர்கள் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர்கள்.