தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியவர்களின் கார் விபத்து: 8 பேர் உயிரிழப்பு - பிகார் சாலை விபத்து

பிகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில், லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

Eight people die in road accident in Bihar
திருமணத்தில் பங்கேற்று திரும்பியவர்களின் கார் விபத்து: 8 பேர் உயிரிழப்பு

By

Published : Feb 23, 2021, 10:15 AM IST

பாட்னா: பிகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில், லாரியும் காரும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த குடும்பத்தினர், பிகாரில் நடைபெற்ற திருமணத்தில் பங்கேற்றுவிட்டு காரில் ஊர் திரும்பியுள்ளனர். பிகார் மாநிலம் கதிஹார் மாவட்டம் அருகே கார் சென்றபோது, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து குறித்து அறிந்த காவல் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க:லாரி மோதி இருவர் உயிரிழப்பு: உடல்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்ற அவலம்!

ABOUT THE AUTHOR

...view details