தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நல்கொண்டாவில் 10 நாள்களில் 8 கொலை: கர்நாடகாவில் பயங்கரம்!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஒருங்கிணைந்த நல்கொண்டா மாவட்டத்தில் தொடர்ந்து நடந்த எட்டு கொலை சம்பவங்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

10 நாள்களில் 8 கொலை
10 நாள்களில் 8 கொலை

By

Published : Jan 28, 2021, 3:27 PM IST

Updated : Jan 28, 2021, 4:20 PM IST

கர்நாடக மாநிலம் ஒருங்கிணைந்த நல்கொண்டா மாவட்டத்தில் (தற்போது இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது) கடந்த 10 நாள்களில் மட்டும் 8 கொலைகள் நடந்துள்ளன. இந்தக் கொலை சம்பவங்களின் உச்சமாக காவல் துறையினருக்குச் சவால் விடும்விதமாக கடந்த இரண்டு நாள்களில் மட்டும் ஆறு கொலைகள் நடந்துள்ளன.

ஜனவரி 8ஆம் தேதி, முனுகோடு மண்டலத்தில் வசிக்கும் அனில், என்பவர் மண பந்தத்தைத் தாண்டிய உறவில் ஈடுபட்ட தனது மனைவியை கண்டித்தால், மனைவியின் காதலனால் கொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கு ஜனவரி 25ஆம் தேதி வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து,ஜனவரி 14ஆம் தேதி நிலத்தகராறு காரணமாக ஒருவர் கொலைசெய்யப்பட்டார். மேலும், நல்கொண்டா மாவட்ட தலைமையகம் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் நான்கு பேரை கட்டையால் அடித்து கொலைசெய்தனர்.

இதன் தொடர்ச்சியாக ஜனவரி 26ஆம் தேதி, நாம்பள்ளி மண்டலம் தேவத் பல்லியில், விவாகரத்தை ஏற்காத காரணத்தால் கணவர் தனது மனைவியைக் குத்திக் கொலைசெய்தார்.

இந்தக் கொலை சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை குற்றவாளிகளை கைதுசெய்து சிறையில் அடைத்துவருகின்றனர். இருந்தபோதிலும் தொடர் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும், இந்தக் கொலை வழக்குகள் குறித்து காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: சீர்காழி நகைக் கொள்ளை: 17கிலோ தங்கம் பறிமுதல்... மூவர் கைது, ஒருவர் சுட்டுக் கொலை!

Last Updated : Jan 28, 2021, 4:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details