தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் சிறுத்தைகளைக் கொன்று நகம், எலும்பை விற்க முயற்சி - 8 பேர் கைது! - ஹாசன் மாவட்டத்தில் சம்பவம்

கர்நாடகாவில் இருவேறு சம்பவங்களில், இரு சிறுத்தைகளைக் கொன்று, அவற்றின் நகங்கள் மற்றும் எலும்புகளை விற்க முயன்ற எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

Eight
Eight

By

Published : Dec 4, 2022, 10:48 PM IST

ஹாசன்: கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் குமரனஹள்ளி பகுதியில் மாட்டை வேட்டையாட வந்த சுமார் நான்கு வயதுடைய பெண் சிறுத்தையை சிலர் வேட்டையாடினர். சிறுத்தையை கொன்று அதன் எலும்பு, நகங்களை எடுத்து விற்க முயன்றபோது, போலீசில் பிடிபட்டனர். இது தொடர்பாக ரவி, மோகன், சுவாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரவி, மோகன் இருவரும் சிறுத்தையை கொன்றதாகவும், அதன் சடலத்தை புதைக்கவும், எலும்பு- நகங்களை விற்கவும் ஏடிஎம் காவலாளியான சுவாமி உதவியாக தெரிகிறது.

இதேபோல், ஆலுர் வனச் சரகத்திற்குட்பட்ட மடிஹள்ளி பகுதியில், சுமார் எட்டு வயதுடைய ஆண் சிறுத்தையை கொன்று, அதன் நகங்களை விற்பனை செய்ய முயன்ற மஞ்சேகவுடா, மோகன், காந்தராஜு, ரேணுகா குமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சிறுத்தையின் நகங்கள் மற்றும் கால்களை விற்க முயன்றபோது பிடிபட்டனர்.

இந்த இரண்டு சம்பவங்களிலும் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களிடமிருந்து சிறுத்தையின் நகங்கள், எலும்புகளை பறிமுதல் செய்ததாகவும், ஹாசன் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பீகாரில் துப்பாக்கிச்சூட்டில் சிறுமி பலி - நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details