பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள மசெளர்ஹியில் இருக்கும் சாபூர் என்ற கிராமத்தில் ராஜ்குமார் - சந்திரபிரபா குமாரி என்ற தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பாபி ராஜ் (8) என்ற மகன் உள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு நர்சரி முதல் 10 ஆம் வகுப்பு வரையில் உள்ள தனியார் பள்ளியை பாபியின் பெற்றோர் அப்பகுதியில் தொடங்கினர்.
இந்த நேரத்தில் கரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வர பள்ளி மூடப்பட்டது. இதனால் தங்கள் வீடுகளிலே பள்ளிப் பாடத்தை தொடங்கினர். அப்போது சிறுவன் பாபி, 10 ஆம் வகுப்பில் உள்ள கணிதப்பாடத்திற்கு தீர்வினை எவ்வித சந்தேகமும் இன்றி தீர்த்துள்ளார்.