நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் பள்ளிக் கல்வித் துறை, ஒன்றிய கல்வி அமைச்சகம் இணைந்து, NIPUN Bharat என்ற திட்டத்தை நாளை (ஜூலை 5) நாடு முழுவதும் தொடங்கவுள்ளது. ஒன்றிய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் இதை இணைய வாயிலாக தொடங்கிவைக்கிறார்.
நாடு முழுவதும் உள்ள பள்ளிக் குழந்தைகளின் கல்வி, எண்ணறிவு திறனை மேம்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2026-27ஆம் ஆண்டுக்குள் குறைந்தது மூன்றாம் வகுப்பிலேயே மாணவர்கள் எழுதுதல், படித்தல், எண்ணிக்கை அறிவு பெறுதல் ஆகியவற்றில் அடிப்படை திறன் பெற வேண்டும் என இலக்கு நிர்ணையிக்கப்பட்டுள்ளது.