தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மம்தா மருமகன், மருமகளுக்கு சம்மன்! - மம்தா

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்பு வழக்கில் மம்தா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி மற்றும் அவரின் மனைவிக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை (சம்மன்) வழங்கியுள்ளது.

Abhishek Banerjee
Abhishek Banerjee

By

Published : Aug 28, 2021, 5:37 PM IST

டெல்லி : மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி. இவர் டைமண்ட் ஹார்பர் (Diamond Harbour) மக்களவை தொகுதி உறுப்பினர் ஆவார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இவர் பொதுச்செயலாளராக உள்ளார்.

இந்நிலையில் இவருக்கு அமலாக்கத்துறை சார்பில் சம்மன் (அழைப்பாணை) ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பாணையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் அலுவலர்கள் முன் செப்டம்பர் 6ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிஷேக் பானர்ஜியின் மனைவி ருஜ்ரியாவுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் செப்டம்பர் 1ஆம் தேதி ஆஜராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபிஷேக் மனைவி ருஜ்ரியா மீது ஏற்கனவே சிபிஐ அலுவலர்களும் விசாரணை நடத்திவருகின்றனர். இவர்கள் இருவர் மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு வழக்கில் 2020 நவம்பர் மாதம் குற்றபத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க : பாஜக வருமானம் 50% அதிகரிப்பு, உங்கள் வருவாய்? ராகுல் காந்தி

ABOUT THE AUTHOR

...view details