புதுடெல்லி: டெல்லி சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் சத்யேந்தர் குமார் ஜெயின். இவர் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற புகார் எழுந்தது. இந்தப் புகார் மீது அமலாக்கத்துறை அலுவலர்கள் மற்றும் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில், 2018ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி சத்யேந்தர் ஜெயின் மீது சிபிஐ அலுவலர்கள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்தக் குற்றப் பத்திரிகையில், அமைச்சர் சத்தேயந்தர் குமார் ஜெயின், அவரின் மனைவி பூணம் ஜெயின், அஜித் பிரசாத், சுனில் குமார் ஜெயின், வைபவ் ஜெயின் மற்றும் அங்குஷ் ஜெயின் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.