ஹைதராபாத்:தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் மற்றும் ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள எம்பிஎஸ் ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் முசதிலால் ஜெம்ஸ் & ஜூவல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய 2 நிறுவனங்களுக்கும் சொந்தமான இடங்களில் இன்று (அக் 21) அமலாக்கத்துறை அலுவலர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அந்த சோதனையில் ரூ.149.10 கோடி மதிப்பிலான சொத்துக்கள், ரொக்கமாக ரூ.1.96 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் 2 நகைக்கடைகளின் ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்துக்களை பறிமுதல் - தெலங்கானாவில் அமலாக்கத்துறை சோதனை
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள 2 நகைக்கடைகளின் ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நிறுவனங்களின் இயக்குனர்கள் சுகேஷ் குப்தா மற்றும் அனுராக் குப்தா ஆகியோர் மீது எழுந்த புகாரின் அடிப்படையில் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதுதொடர்பான விசாரணையில், அக்டோபர் 18ஆம் தேதி சுகேஷ் குப்தா கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனிடையே நடந்த சோதனையில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இருவர் மீதும் ஏற்கனவே சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மகாராஷ்டிராவில் தடை செய்யப்பட்ட பிஎஃப்ஐ அமைப்பை சேர்ந்த 4 பேர் கைது