தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ.250 கோடி உதவித்தொகை ஊழல் - இமாச்சல் உள்ளிட்ட 4 மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை!

ED raids for Rs 250 crore scholarship scam: ரூ.250 கோடி மாணவர் உதவித்தொகையில் ஊழல் நடந்ததாக பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், இன்று இமாச்சலப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகிய 4 மாநிலங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 7:47 PM IST

சிம்லா (இமாச்சலப்பிரதேசம்):இமாச்சலப்பிரதேசத்தில், கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களில் உதவித்தொகைக்கு தகுதியான மாணவர்களுக்கு அவர்களது உதவித்தொகை செலுத்தப்படவில்லை என தெரிகிறது. குறைந்தபட்சம் 250 கோடி ரூபாய் தனியார் கல்வி நிறுவனங்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது.

அதேநேரம், அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களின் கணக்கில் வெறும் 56 கோடி ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. எனவே, தங்களுக்கு உரிய உதவித்தொகை வரவில்லை என மாணவர்கள் புகார் அளித்து உள்ளனர். ஆனால், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

நம்பத்தகுந்த ஆதாரங்களின்படி, 50 கோடி ரூபாய் இமாச்சலப்பிரதேசத்தின் பழங்குடியின மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், 2019ஆம் ஆண்டு அம்மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் லஹுலால் ஸ்பிட்டி ராம்லால் மார்க்கண்டா, தனது தொகுதியில் (பழங்குடியின தொகுதி) உள்ள மாணவர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை என புகார் அளித்து உள்ளார்.

இதனையடுத்து அப்போதைய ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக அரசு, இதனை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளது. இதனையடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு மே மாதம், இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி உள்ளது. இந்த விசாரணையில், இமாச்சலப்பிரதேசம் மட்டுமின்றி ஹரியானா, பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகிய நான்கு மாநிலங்களில் 266 தனியார் கல்வி நிறுவனங்கள் உள்பட ஆயிரத்து 176 கல்வி நிறுவனங்களும், இந்த உதவித்தொகை ஊழலில் சம்பந்தப்பட்டு இருப்பதாக தெரிய வந்து உள்ளது.

இதில் 28 கல்வி நிறுவனங்களில் உதவித்தொகை வழங்குவதில் ஊழல் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனையடுத்து, இவற்றில் 11 கல்வி நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சிபிஐ, மீதம் உள்ள 17 கல்வி நிறுவனங்களிடம் விசாரணை மேற்கொண்டது. மேலும், இது தொடர்பாக 10 பேரை சிபிஐ கைது செய்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில்தான், பணமோசடி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத்துறை (ED), இன்று (ஆகஸ்ட் 29) இந்த விவகாரம் தொடர்பாக இமாச்சலப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் அதிரடி சோதனை நடத்தியது.

இதையும் படிங்க:Imran Khan : இம்ரான் கான் விடுதலை... முறைகேடு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறுத்திவைப்பு!

ABOUT THE AUTHOR

...view details