டெல்லி:ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவரும், டெல்லி சுகாதாரத் துறை அமைச்சருமான சத்யேந்திர ஜெயின் மீது ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இதனிடையே கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக குற்றஞ்சாட்டி சத்யேந்தர் ஜெயினை மே 30ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது.
டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் சோதனை - சத்யேந்திர ஜெயின் வீட்டில் சோதனை
டெல்லியில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
ED raids Delhi Health Minister Satyendra Jain's residence
இதையடுத்து சத்யேந்திர ஜெயினை ஜூன் 9ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அவரிடம் பல்வேறு கட்ட விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இந்த நிலையில் இன்று (ஜூன் 6) காலை முதல் சத்யேந்திர ஜெயின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அலுவலர்கள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பல ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க:டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் கைது!