தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முன்னாள் அமைச்சர் வீட்டில் ரெய்டு! - ரெய்டு

முன்னாள் அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினார்.

Anil Deshmukh
Anil Deshmukh

By

Published : Jun 25, 2021, 3:23 PM IST

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் வீட்டில் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினார்கள்.

இந்தச் சோதனையின்போது அனில் தேஷ்முக் வீட்டின் முன்பு பெண் சிஆர்பிஎஃப் வீராங்கனைகள் குவிக்கப்பட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. முன்னதாக மாநில உள்துறை அமைச்சராக அனில் தேஷ்முக் பொறுப்பிலிருந்த போது அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.

அப்போது மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில், “அமைச்சர் ரூ.100 கோடி வரை லஞ்சம் வாங்கி தரும்படி கூறுகிறார்” எனத் தெரிவித்திருந்தார். இது குறித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது. மத்திய குற்ற புலனாய்வு அமைப்பும் விசாரணை நடத்திவருகிறது.

இதையும் படிங்க: 'இடஒதுக்கீடு நம் உரிமை' - வி.பி. சிங்கை நினைவுகூர்ந்த ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details