மகாராஷ்டிரா:மும்பையில் உள்ள சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் வீட்டில் இன்று (ஜூலை 31) காலை 7 மணி முதல், அமலாக்கத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு விசாரணைக்கு வருமாறு சஞ்சய் ராவத்தை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால், நாடாளுமன்ற மழைக்கால கூட்டுத்தொடரை காரணம் காட்டி விசாரணைக்கு செல்வதை சஞ்சய் ராவத் தவிர்த்து வந்தார்.
இதனிடையே தனது வழக்கறிஞர்கள் மூலம் அமலாக்கத் துறையை அணுகி விசாரணையில் கலந்து கொள்ள ஆகஸ்ட் 7ஆம் தேதிவரை அவகாசம் கோரினார். ஆனால், அவரின் கோரிக்கையை நிராகரித்த அமலாக்கத் துறை புதிய சம்மன் ஒன்றை அனுப்பியது. அதன்படி, ஜூலை 27ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சஞ்சய் ராவத்திடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் சஞ்சய் ராவத் விசாரணைக்கு ஆஜராகவில்லை.