தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் மனைவியின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை! - அலிபாக்கில் உள்ள 8 நிலங்கள் மற்றும் மும்பையில் உள்ள பங்களா

சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் மனைவி உள்ளிட்டோரின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தின் மனைவியின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!
சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தின் மனைவியின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!

By

Published : Apr 6, 2022, 6:22 AM IST

மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்த கூட்டணி ஆட்சியில் உள்ளது. எதிர்கட்சியாக பாஜாக உள்ளது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 4) சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தின் மனைவி வர்ஷா ராவத் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்டோரின் 11.15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அமலாக்கத் துறையின் 2022 ஆம் ஆண்டின் பண மோசடி தடுப்புச் சட்டம் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான சஞ்சய் ராவத்தின் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இதற்கு பதிலளித்த சஞ்சய் ராவத், இதுபோன்ற மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டேன். உண்மை வெளிவரும் என தெரிவித்துள்ளார்.

சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்தின் மனைவியின் சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை!

மும்பையில் ரூ.1,034 கோடி மதிப்புக்கு நிலமோசடி செய்யப்பட்டதாக சஞ்சய் ராவத் மீது குற்றச்சாட்டபட்டது. இதுதொடர்பாக பிரவீன் ராவத் என்பவர் கைது செய்யப்பட்டார். அலிபாக்கில் உள்ள 8 நிலங்கள், மும்பை தாதரில் உள்ள ஒரு சொகுசு பங்களா முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கண்காணிப்புக்குழு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கலாம் - உச்ச நீதிமன்றம்

ABOUT THE AUTHOR

...view details