தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'தேர்தலை பார்த்து பாஜகவிற்கு பயம்' - டெல்லி துணை முதலமைச்சர் - ED action against manish sisodia

டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் உதவியாளரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லி துணை முதலமைச்சர்
டெல்லி துணை முதலமைச்சர்

By

Published : Nov 5, 2022, 9:22 PM IST

டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக, துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து விளக்கம் அளித்த துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, பழிவாங்கும் நோக்கில் பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. சிபிஐ சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவின் உதவியாளரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். மதுபான கொள்கை விவகாரம் தொடர்பாக தனது வீட்டில் நடத்திய சோதனையில் எதுவும் கிடைக்காததால் தனது உதவியாளரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளதாக மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

இந்த கைது நடவடிக்கைக்கு பின்னால் பாஜக இருப்பதாகவும் தேர்தலை பார்த்து அக்கட்சி பயப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.

இதையும் படிங்க:ராஜஸ்தான் சாலை விபத்தில் 2 பிஎஸ்எஃப் ஜவான்கள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details