தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நடிகை அர்பிதா முகர்ஜி வீட்டிலிருந்து ஊழல் தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை தகவல்! - பார்த்தா சட்டர்ஜியின் நெருங்கிய தோழி அர்பிதா

ஆசிரியர்கள் நியமன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை அர்பிதா முகர்ஜியின் வீட்டிலிருந்து, ஊழல் தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

Partha
Partha

By

Published : Jul 23, 2022, 9:11 PM IST

கொல்கத்தா: பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமன ஊழல் தொடர்பான வழக்கில் மேற்குவங்க மாநில தொழில்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவரது நெருங்கிய தோழியான பாடகியும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியையும் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து ஹரிதேவ்பூரில் உள்ள அர்பிதா முகர்ஜியின் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் சுமார் 21 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 79 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நிலையில், அர்பிதா முகர்ஜியின் வீட்டிலிருந்து வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ஆள்சேர்ப்பு ஊழல், உயர்கல்வித்துறை தொடர்பான முக்கிய ஆவணங்களும் சிக்கியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இதனால், பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணமும் ஊழலில் தொடர்புடையதாக இருக்கலாம் என அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். அர்பிதா முகர்ஜி இந்தி, பெங்காலி, ஒடியா, தமிழ் மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த சில ஆண்டுகளாக அமைச்சர் பார்த்தா சட்டர்ஜியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால், அமைச்சர் சட்டர்ஜி அர்பிதாவுடன் இருக்கும் புகைப்படங்களை பாஜகவினர் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க:பள்ளி ஆசிரியர்கள் நியமன ஊழல் - மேற்குவங்க தொழில்துறை அமைச்சர் சட்டர்ஜி கைது!

ABOUT THE AUTHOR

...view details