தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி சுகாதாரத் துறை அமைச்சர் கைது! - சத்யேந்தர் ஜெயின் கைது

ஆம் ஆத்மி அரசின் மூத்தத் தலைவரும், டெல்லி சுகாதாரத் துறை அமைச்சருமான சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டார்.

Satyendar Jain
Satyendar Jain

By

Published : May 30, 2022, 7:48 PM IST

புதுடெல்லி: ஆம் ஆத்மி அரசின் மூத்தத் தலைவரும், டெல்லி சுகாதாரத் துறை அமைச்சருமான சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டார்.

சட்ட விரோத பணப் பரிமாற்ற குற்றத்தின் பேரின் அமலாக்கத்துறை இவரை கைது செய்து விசாரித்துவருகிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, சத்யேந்தர் ஜெயின் மீது கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இந்தக் குற்றஞ்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை சத்யேந்தர் ஜெயினை கைது செய்துள்ளார்.

சத்யேந்தர் ஜெயின் அரவிந்த் கெஜ்ரிவாலின் நன்மதிப்புக்குரிய அமைச்சர் ஆவார். இவரின் கைது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சீன விசா மோசடி குற்றச்சாட்டு - சிபிஐ முன் ஆஜரானார் கார்த்தி சிதம்பரம்

ABOUT THE AUTHOR

...view details