தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வளர்ச்சி என்னும் தண்டவாளத்தில் வரும் பொருளாதாரம் - மத்திய அமைச்சர் நம்பிக்கை!

டெல்லி: கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த போடப்பட்ட ஊரடங்கால், எதிர்பார்த்ததைவிட அதிக வேகத்தில் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் வருகிறது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி எனும் தண்டவாளத்தில் வரும் பொருளாதாரம் -மத்திய அமைச்சர் நம்பிக்கை!
வளர்ச்சி எனும் தண்டவாளத்தில் வரும் பொருளாதாரம் -மத்திய அமைச்சர் நம்பிக்கை!

By

Published : Nov 4, 2020, 8:33 PM IST

கரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது சில தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இதனால், பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்தது. ஆனால், தற்போது, பொருளாதாரம் மீண்டுவருவதைக் காண முடிகிறது.

இந்நிலையில், அமைச்சரவைக் கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “ரயில் பயணம் அதிகரிப்பு, ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரிப்பு, மின் தேவை அதிகரிப்பு, அந்நிய நேரடி முதலீடு ஆகியவை தற்போது அதிகரித்துவருகிறது. இதன்மூலம் தற்போது பொருளாதாரம் வளர்ச்சி என்னும் பாதையில் வருகிறது.

அதுமட்டுமின்றி 12 சதவிகித மின்சார உற்பத்தி அதிகரித்துவருவதால் பொருளாதாரம் விரைவில் இயல்புநிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

மேலும், கடந்த எட்டு மாதத்தில் இல்லாத அளவு ஜிஎஸ்டி வசூலும் பத்து சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.55 லட்சம் கோடியைத் தொட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...இந்திய கைப்பேசி பயனர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்த மைக்ரோமேக்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details