தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பொருளாதார குற்றவாளிகளை விரைவில் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவோம்' - பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி

நீரவ் மோடி உள்ளிட்ட பொருளாதார குற்றவாளிகளை விரைவில் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்புவோம் என பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

Nirav Modi
Nirav Modi

By

Published : Jun 10, 2021, 11:07 PM IST

முன்னணி வைர வியாபாரியான நீரவ் மோடி ரூ.13,000 கோடி அளவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து பிரிட்டன் நாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளார். அவரை இந்தியா கொண்டுவர வெளியுறவுத் துறை சார்பில் தொடர்ந்து முயற்சி நடைபெற்றுவரும் நிலையில் நாடு கடத்தல் சட்ட விதிகளின்படி நடவடிக்கை தாமதமாகிவருகிறது.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறையின் வேண்டுகோளுக்கு இணங்க பிரிட்டன் உள் துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் இந்திய அரசுக்கு நம்பிக்கை அளிக்கும்விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.

எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவில் பொருளாதார குற்றவாளிகளை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்ப பிரிட்டன் அரசு முயற்சி செய்யும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:'தடுப்பூசி போடப்போகிறேன்' - முகக்கவசம் அணிந்து பல்டியடித்த பாபா ராம்தேவ்

ABOUT THE AUTHOR

...view details