டெல்லி: ‘பொதுத் தேர்தல்கள் 2019 ஒரு வரைபடத் தொகுப்பு’ என்ற ஆவணத்தைத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா, தேர்தல் ஆணையர்கள் ராஜீவ் குமார், அனுப் சந்திரா பாண்டே ஆகியோர் வெளியிட்டனர்.
இந்தப் புதுமையான ஆவணத்தைத் தொகுத்த தேர்தல் ஆணைய அலுவலர்களை தலைமைத் தேர்தல் ஆணையர் பாராட்டினார்.
இந்திய தேர்தல்களின் மிகப் பெரிய நிலப்பரப்பை மேலும் ஆராய, கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை இந்த ஆவணம் ஊக்குவிக்கும் என, ஆணையர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த மிகப் பெரிய தேர்தலை நினைவுபடுத்தும் அனைத்து தரவுகள் மற்றும் புள்ளி விவரங்கள் இந்த வரைபடத் தொகுப்பில் அடங்கியுள்ளன.
இதில் 42 கருப்பொருளுடன் கூடிய வரைப்படங்கள், தேர்தலின் பல்வேறு அம்சங்களை சித்தரிக்கும் 90 அட்டவணைகள் உள்ளன.
இந்திய தேர்தல்கள் தொடர்பான சுவாரஸ்ய உண்மைகள், நிகழ்வுகள் மற்றும் சட்டவிதிகளை இந்த வரைபடத் தொகுப்பு பகிர்ந்து கொள்கிறது.
கடந்த 1951-52ஆம் ஆண்டில் முதல் பொது தேர்தல் நடந்ததில் இருந்து, தேர்தல் தரவுகளை தொகுப்பாகவும், புள்ளி விவரங்கள் புத்தகங்களாகவும் தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.
கடந்த 2019இல் நடந்த 17ஆவது பொது தேர்தல், மனித வரலாற்றில் நடந்த மிகப் பெரிய ஜனநாயக நடவடிக்கை.
இதில் 61.468 கோடி வாக்காளர்கள் பங்கேற்றனர். இந்தியாவில் 32 லட்சம் சதுர கிலோ மீட்டர் பகுதியில், 10.378 கோடி வாக்குச் சாவடிகளில் இந்த தேர்தல்கள் நடந்தன.
தேர்தல் தரவுகள், முக்கியமாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கும்போதும், தேர்தல்களை நடத்தும்போதும் தேர்தல் அலுவலர்களால் சேகரிக்கப்படுகிறது.
தேர்தல் ஆணையம் வெளியிட்ட பொது தேர்தல்கள் 2019 வரைப்பட தொகுப்பு! இந்த தரவு பின்னர் அலுவலர்களால் இணைக்கப்படுகிறது. தேர்தல் நடைமுறைகள் முடிந்தபின், இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தரவுகளை சேகரித்து பல வகையான அறிக்கை தொகுப்புகளையும், ஆவணங்களையும் விநியோகிக்கிறது.
543 மக்களவை தொகுதிகளின் தேர்தல் அலுவலர்கள் வழங்கிய தேர்தல் தரவு அடிப்படையில், கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபரில், புள்ளிவிவர அறிக்கைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இந்த வரைபடத் தொகுப்பில் உள்ள வரைபடங்கள் மற்றும் அட்டவணைகள், தேர்தல் தொடர்பான தகவல்களை அளிக்கின்றன.
இந்திய தேர்தலின் பன்முகத்தன்மையை சிறப்பாகப் புரிந்து கொள்ளவும், பாராட்டவும் உதவுகின்றன. தரவுகளை தெரிவிப்பதோடு, இந்த விரிவான வரைப்படங்கள், பல்வேறு நிலைகளில் தேர்தல் முறைகளை தெரிவிக்கின்றன.
அதேபோன்று ஒவ்வொரு இடத்திலும் உள்ள தற்காலிக அமைப்புகளையும் சுட்டிக் காட்டுகின்றன. தேர்தல் தரவுகளை சிறப்பாக தெரிவிக்கும் நோக்கில், இந்த வரைபடத் தொகுப்பு, தகவல் மற்றும் படங்களில் ஆவணமாக உள்ளது.
இது இந்திய தேர்தல் நடைமுறையின் நுணுக்கங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்து, தேர்தலின் போக்கு மற்றும் மாற்றங்களை வாசகர்கள் பகுப்பாய்வு செய்ய வைக்கிறது.
இத்த விவரங்களை சரிபார்க்க இ-அட்லஸ் https://eci.gov.in/ebooks/eci-atlas/index.html. என்ற இணையதளத்தில் உள்ளது.
ஏதாவது ஆலோசனைகள் தெரிவிக்க விரும்பினால், அதை தேர்தல் ஆணையத்திடம் பகிர்ந்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே:சூடுபிடிக்கும் தேர்தல் களம்: மதுரை வந்த பிரதமர் மோடி!