டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வு - பொதுமக்கள் அச்சம்! - டெல்லி பூகம்பம்
01:28 December 18
டெல்லி: தலைநகர் டெல்லியிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
டெல்லி நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளை விட்டு பதறியோடி தெருவுக்கு வந்தனர். ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக இந்த நிலநடுக்கம் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்க அதிர்வுகள் தலைநகர் மற்றும் நொய்டா, குர்கான், காசியாபாத், பரிதாபாத், கிரேட்டர் நொய்டா ஆகிய இடங்களில் உணரப்பட்டன.
தலைநகரில் 144 தடை உத்தரவு அமலிலுள்ள நிலையிலும், வீடுகள் குலுங்கியதால் மக்கள் பதறியடித்துக் கொண்டு தெருவில் தஞ்சம் புகுந்துள்ளனர். தற்போது வரை சேதங்கள் குறித்து தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.