டெல்லி :ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் அதன் அதிர்வலை உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 1 என்ற அளவுகோளில் நிலநட்டுக்கம் பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது.
இன்று (ஜன. 11) நண்பகல் 2.50 மணிக்கு ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆப்கானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் டெல்லி, காசியாபாத், நொய்டா, பரிதாபாத், குருகிராம், காஷ்மீர் பள்ளத்தாக்கு உள்ளிட்ட இடங்களில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.