சியாங் : அருணாச்சலப் பிரதேசத்தின் பங்கின் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.6) லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. இது, ரிக்டர் அளவுக்கோலில் 4.3 எனப் பதிவாகியுள்ளது.
இந்த நிலஅதிர்வு நள்ளிரவு 10.59 மணிக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்திய தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் விடுத்துள்ள செய்தியில், “அருணாச்சலப் பிரதேசத்தின் பங்கின் பகுதியில் சரியாக இந்திய நேரப்படி 22.59.17 மணிக்கு 305 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.