டெல்லி:ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் இன்று (பிப்.16) காலை 5.43 மணியளவில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுக்கோலில் 3.2 எனப் பதிவாகியுள்ளது.
பஹல்காம் பகுதியிலிருந்து 15 கி.மீ தூரத்தில் 16 கிலோ மீட்டர் ஆழத்தில் நில அதிர்வு மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.