ராஜ்கோட் (குஜராத்): துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு, குஜராத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ராஜ்கோட்டில் இருந்து மேற்கே 270 கிமீ தொலைவில் பதிவாகியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை மாலை 3.21 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 400 மிதமான நிலநடுக்கங்கள் பதிவாகியிருப்பதால் இது, 'நிலநடுக்க திரளின்' மையப்பகுதியாக உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரு திரள் என்பது பெரும்பாலும் சிறிய நிலநடுக்கங்களின் வரிசையாகும், அவை பொதுவாக குறுகிய காலமாக இருக்கும், ஆனால் நாட்கள், வாரங்கள் அல்லது சில நேரங்களில் மாதங்கள் கூட தொடரலாம் மற்றும் அடிக்கடி அதே இடத்தில் மீண்டும் நிகழலாம். இந்த 400 நில அதிர்வுகளில் பல அம்ரேலியின் மிதியாலா கிராமத்தில் உணரப்பட்டவையாகும். இதனால் இங்கு வசிப்பவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்கள் வீடுகளுக்கு வெளியே தூங்கத் தொடங்கியுள்ளனர்.
அம்ரேலி மாவட்டத்தில் அதிகப்படியான நிலநடுக்கம் ஏற்பட்டதற்கான இந்த பகுதியின் டெக்டோனிக் அமைப்பு மற்றும் ஹைட்ராலஜிக்கல் லோடிங் காரணம் என்று காந்திநகரைச் சேர்ந்த நிலநடுக்கவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISR) ஆய்வாளர் ஜெனரல் சுமர் சோப்ரா கூறினார்.