ஜலந்தர் (பஞ்சாப்): பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் உயிர், பொருள் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இன்று அதிகாலை 3.42 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. தேசிய நில அதிர்வு மையத்தின் கூற்றுப்படி, நிலநடுக்கத்தின் மையம் அமிர்தசரஸிலிருந்து 145 கிமீ மேற்கு - வடமேற்கில் பூமிக்கு அடியில் 120 கிமீ ஆழத்தில் இருந்தது.
நேற்று இரவு, டெல்லி மற்றும் வட இந்தியாவின் சில மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. டெல்லி என்சிஆர் பகுதியில் இரவு 8 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. உத்தரபிரதேசத்தில் காசியாபாத், நொய்டா, பிஜ்னோர், மொராதாபாத் மற்றும் அம்ரோஹா ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷ், அல்மோரா, சாமோலி, ராம்நகர் மற்றும் உத்தரகாசி ஆகிய இடங்களில் நில நடுக்கம் உணரப்பட்டது.
நேபாளத்தில் சனிக்கிழமை இரவு 7:57 மணியளவில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையம் 10 கி.மீ ஆழத்தில் இருந்தது.