தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி, நேபாளத்தில் நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி! - earthquake

டெல்லி, நொய்டா, நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் நிலநடுக்கம்; உயரும் பலி எண்ணிக்கை
நேபாளத்தில் நிலநடுக்கம்; உயரும் பலி எண்ணிக்கை

By

Published : Nov 9, 2022, 7:34 AM IST

Updated : Nov 9, 2022, 8:55 AM IST

டெல்லி: நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இன்று (நவ. 9) அதிகாலை 1.57 மணியளவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இதே போன்று டெல்லி, நொய்டாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது.

இது குறித்து ஈடிவி பாரத் ஊடகத்திடம் டெல்லியைச் சேர்ந்த சிலர் பேசினர்.

அதில் டெல்லியைச் சேர்ந்த பேருந்து பயணி ஒருவர் கூறுகையில், "நாங்கள் ஆட்டோவில் இருந்து இறங்கும்போது நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆட்டோ ஓட்டுநர் பயந்துவிட்டார். நான் சுற்றிப் பார்த்தபோது, ​​மற்றவர்களும் நிலநடுக்கத்தை உணர்ந்ததைக் கண்டேன். நிலநடுக்கம் விரைவில் நின்றுவிட்டது" என்றார்.

டெல்லியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ரஞ்சன் என்பவர் கூறுகையில், "நான் ஒரு பயணியை சவாரிக்கு அழைத்துச் சென்றேன். அப்போது நிலநடுக்கத்தை நாங்கள் உணர்ந்தோம். பயணி உடனடியாக இறங்கினார். சிறிது நேரம் நாங்கள் அதை உணர்ந்தோம்" என்றார்.

டெல்லியைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் சல்மான் என்பவர் கூறுகையில், "நிலநடுக்கத்தை நாங்கள் உணர்ந்தோம். சிலர் உணரவில்லை" என்றார்.

இதேபோல் நொய்டாவில் வசிக்கும் சிலர் நிலநடுக்கம் சூழ்நிலையின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அதில் நொய்டாவில் பணிபுரியும் சன்னி என்பவர் கூறுகையில், " நிலநடுக்கம் உணர்ந்தவுடன், அலுவலகத்தின் அலாரம் அடிக்கப்பட்டது. நாங்கள் உடனடியாக அலுவலகத்திற்கு வெளியே ஓடிவிட்டோம். எங்கள் நிறுவனம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. நிலநடுக்கம் பயங்கரமாக இருந்தது" என்றார்.

நொய்டாவில் பணிபுரியும் மற்றொரு நபரான சூரஜ் திவாரி என்பவர் கூறுகையில், "என் இருக்கை அதிர்ந்தது, அலுவலகத்தின் அலாரம் அடித்தது, அதன் பிறகு நாங்கள் கட்டடத்திற்கு வெளியே ஓடினோம். 10 நிமிடங்களுக்கு பின்னர் அலுவலகத்தின் உள்ளே சென்று எங்கள் வேலையைத் தொடங்கினோம்" என்றார்.

நொய்டாவில் வசிக்கும் உள்ளூர்வாசி பிரஜுஷா என்பவர் கூறுகையில், "நிலநடுக்கம் ஏற்பட்டபோது நான் அலுவலகத்தில் இருந்தேன். அப்போது நிலநடுக்கம் ஏற்பட்டதை உணர்ந்தேன். உடனே கட்டடத்தை விட்டு வெளியேறினோம்" என்றார்.

இதையும் படிங்க: Fact check : மனிதர்களை தாக்கிய கரடி - தவறாக பரவும் வீடியோ

Last Updated : Nov 9, 2022, 8:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details