போர்ட்பிளேயர்: அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை லேசான நிலடுக்கம் உணரப்பட்டுள்ளது என நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 5.31 மணயளவிற்கு தலைநகர் போர்ட்பிளேயரில் இருந்து தென்-தென்கிழக்காக 165 கி.மீ தூரத்தில் இது உணரப்பட்டதாகவும், 100 கி.மீ ஆழத்திற்கு மையம் கொண்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.