ஜபால்பூர்(மத்திய பிரதேசம்): மத்திய பிரதேச மாநிலத்தின் ஆறு மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் இன்று (நவ-1) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் 4.3 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதில் உயிரிழப்பு ஏதுமில்லை எனவும், பொருள்கள் எதுவும் சேதமடைய வில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது. காலை 8.44 மணியளவில் திண்டோரி, ஜபல்பூர், மாண்ட்லா, அனுப்பூர், பாலகாட் மற்றும் உமாரியா ஆகிய மாவட்டங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
நிலநடுக்கம் உணரப்பட்டதையடுத்து, அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். இதனையடுத்து வானிலை ஆய்வுத் துறை அதிகாரி அளித்த கூற்றுப்படி, ‘ ஜபல்பூரிலிருந்து 35 கிமீ தொலைவில் உள்ள திண்டோரிக்கு அருகில் 22.73 டிகிரி வடக்கு அட்சரேகை, 81.11 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை மற்றும் 10 கிமீ ஆழத்தில் மையப்பகுதியில் இருந்த எரிமலை ஒன்று வெடித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவே நிலநடுக்கத்திற்கு காரணம் என யூகிக்கப்படுகிறது.
இதையும் படிங்க:மோடி விசிட்டிற்காக புதுப்பிக்கப்படும் மோர்பி அரசு மருத்துவமனை