இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தஜிகிஸ்தன் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி-ஐ சந்தித்து ஆலோசனை செய்தார்.
தெற்காசிய கூட்டமைப்பின் 21ஆவது உச்ச மாநாடு இன்று (செப்.17) நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். அதற்கு முன்னதாக இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை செய்துள்ளனர்.
இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை அண்மைக் காலமாக தலைதூக்கியுள்ளது. கடந்தாண்டு கிழக்கு லடாக் பகுதியில் இரு நாட்டு ராணுவத்திற்கு இடையே நடைபெற்ற மோதல், உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
பின்னர் இரு நாட்டு ராணுவ தளபதிகளும் பேச்சுவார்த்தை நடத்தி படைவிலகலை மேற்கொண்டுவரும் நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர்களும் உறவை சீர்செய்யும் நோக்கில் இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பு குறித்து ஜெய்சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், "சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி உடனான சந்திப்பில் எல்லை விவகாரம், இரு நாட்டு அமைதி ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தியா சீனாவுடனான மோதல் மனப்பான்மையை விரும்பியதில்லை.
அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் சீனாவும் இதைக் கருத்தில் கொண்டு மூன்றாம் நாட்டின் கண்கொண்டு இந்தியாவை அணுகக் கூடாது. ஆசியாவின் வலிமையைக் கருத்தில் கொண்டு இந்தியாவும் சீனாவும் ஒற்றுமைக்கு உதாரணமாகத் திகழ வேண்டும்." என்றார்.
இதையும் படிங்க:பிரதமர் மோடி 71 - மெகா திட்டங்களுடன் பிறந்தநாளை கொண்டாடும் பாஜக