டெல்லி: அரசு முறை பயணமாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வரும் ஜூலை 8ஆம் தேதி ரஷ்யா செல்லவிருக்கிறார்.
ரஷ்யா செல்லும் வெளியுறவுத் துறை அமைச்சர்! - United Nations Security Council
ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜூலை 8ஆம் தேதி ரஷ்யா செல்கிறார். இந்தியா - ரஷ்யா இடையே புதிய ஒப்பந்தங்கள் குறித்து இந்த சுற்றுப் பயணத்தில் பேச வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியுறவுத் துறை
இந்தப் பயணத்தின் மூலம் ஆயுதங்கள், ஹைட்ரோ கார்பன்கள், அணுசக்தி, வைரங்கள், வளர்ச்சித் துறைகளான சுரங்க, வேளாண் தொழில்துறை மற்றும் உயர் தொழில்நுட்பம், ரோபாட்டிக்ஸ், நானோடெக் மற்றும் பயோடெக் உள்ளிட்டவற்றில் ரஷ்யாவின் ஒத்துழைப்பை இந்தியா வலுப்படுத்தும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக சீர்திருத்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில், அணுசக்தி விநியோகக் குழுவின் நிரந்தர உறுப்பினர்களுக்கான இந்தியாவின் மனுவை ரஷ்யா ஆதரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.