ஜல்கான் (மகாராஷ்டிரா):மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உயரம் குறைந்த ஆணுக்கும், உயரம் குறைந்த பெண்ணுக்கும் பெற்றோரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நேற்று (மே 28) நடைபெற்றது.
மகாராஷ்டிராவின் ஷானிபெத்தே பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் சஞ்சய் சப்கலே. வங்கியில் வேலை பார்க்கும் சந்தீப், உயரம் குறைவால் தனது திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தேடி வந்துள்ளார். சந்தீப் 36 இஞ்ச் உயரம், அதாவது மூன்று அடி ஆகும்.
அதேபோல், துலே மாவட்டத்தைச் சேர்ந்த உஜ்வாலா காம்ப்ளேவும் உயரம் குறைவால் தனக்கு ஏற்ற மணமகன் கிடைக்காமல் தேடி வந்துள்ளார். உஜ்வாலா 31 இஞ்ச் உயரம் உள்ளவர்.
இந்நிலையில், சந்தீப் குடும்பத்தினருக்கு உஜ்வாலா குறித்து தெரியவந்தது. இருவீட்டாரும் சந்தித்து பேசியதையடுத்து, இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது.
இது குறித்து சந்தீப்பின் தாய் கூறுகையில், "உயரம் குறைவால் என் மகனுக்கு பெண் கிடைக்காமல் தேடி வந்தோம். உயரம் குறைவால் யாரும் பெண் கொடுக்க தயாராக இல்லை. இந்நிலையில் உஜ்வாலா குறித்து தெரியவந்தது. உஜ்வாலாவை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என் சொந்த மகள் போல உஜ்வாலாவை பார்த்துக் கொள்வேன்" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
ஜல்கானின் நடைபெற்ற இவர்களது திருமணத்தில், உறவினர்கள், ஊர் மக்கள் எனப் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். நண்பர்கள் மணமக்களுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: ஒரு ரூபாய்க்கு 10 சானிட்டரி நாப்கின்கள் - மகாராஷ்டிரா அரசின் மாஸ்டர் பிளான்!