தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் களைகட்டிய தசரா...மின்னொளியில் ஜொலிக்கும் பாரம்பரிய கட்டடங்கள்

கர்நாடகாவில் தசரா விழா துவங்கியதையொட்டி உலகப் புகழ்பெற்ற அம்பா விலாச அரண்மனை, நகரின் முக்கியமான பாரம்பரிய கட்டிடங்கள், சாலைகள், ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் களைகட்டிய தசரா...மின்னொளியில் ஜொலித்த பாரம்பரிய கட்டிடங்கள்
கர்நாடகாவில் களைகட்டிய தசரா...மின்னொளியில் ஜொலித்த பாரம்பரிய கட்டிடங்கள்

By

Published : Sep 27, 2022, 11:18 AM IST

மைசூர்:கர்நாடகாவில் தசரா விழா மிகவும் பிரசிபெற்றதாகும். இந்த ஆண்டு தசரா விழாவை சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டேஸ்வரி தேவியின் சிலைக்கு மலர் தூவி ஜனாதிபதி திரௌபதி முர்மு நேற்று துவக்கி வைத்தார்.

நாட ஹப்ப என்றழைக்கப்படும் தசரா விழாவையொட்டி உலகப் புகழ்பெற்ற அம்பா விலாச அரண்மனை, நகரின் முக்கியமான பாரம்பரிய கட்டடங்கள், சாலைகள் ஆகியவை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

விமான நிலையத்திலிருந்து 124 கி.மீ தூரம் உட்பட சாலைகள், 96 ரவுண்டானாக்கள், 28 விதமான பிரதிகள், பாரம்பரிய கட்டிடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

கர்நாடகாவில் களைகட்டிய தசரா...மின்னொளியில் ஜொலித்த பாரம்பரிய கட்டிடங்கள்

மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நகரத்தை கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ பொம்மை, மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.டி.சோமசேகர் ஆகியோர் பார்வையிட்டனர். மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, எரிசக்தி துறை அமைச்சர் சுனில் குமார் ஆகியோர் மைசூர் நகரின் விளக்குகளை கண்டு மகிழ்ந்தனர்.

உலகப் புகழ்பெற்ற 'தசரா ஜம்புசவாரி', என்னும் தங்க ஹவுடாவில் சாமுண்டேஸ்வரி தேவியின் சிலையை சுமந்து செல்லும் யானைகளின் ஊர்வலம், விழாவின் 10-ஆம் நாளான விஜயதசமி அன்று நடைபெறுகிறது.

இதையும் படிங்க:கர்நாடகாவில் பிஎப்ஐ அமைப்பைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் கைது

ABOUT THE AUTHOR

...view details