மேற்கு வங்கம்: ஜல்பைகுரி மாவட்டத்தில் நேற்று (அக்-5) மாலை ஹர்பா நதி அருகே உள்ள சிறிய தீவில் துர்கா சிலையை கரைக்க சென்றவர்களில் வெள்ளத்தில் மூழ்கி 7 பேர் உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளனர்.
துர்கா சிலை கரைப்பு...ஆற்றில் திடீர் வெள்ளம் - நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு - 7 பேர் உயிரிழப்பு
மேற்கு வங்க மாநிலத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தில் துர்கா சிலையை ஆற்றில் கரைக்க சென்ற போது வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர்.
Etv Bharatதுர்கா சிலையை கரைக்கும் ஆற்றில் திடீர் வெள்ளம் - நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஆற்றின் நடுவில் உள்ள ஒரு தீவில் சிக்கித் தவித்த 40 பேர் மீட்கப்பட்டனர்.காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியை கண்காணித்து வருகின்றனர். எஞ்சியுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க:4 கார்கள் ஆம்புலன்ஸுடன் மோதியதில் சாலை விபத்து; 5 பேர் உயிரிழப்பு