நம்நாட்டில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவிஷீல்டு, கோவாக்ஸின் ஆகிய இரண்டு வகையான தடுப்பூசிகள் பெரும்பாலும் மக்களுக்கு செலுத்தப்படுகின்றன.
இதில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸிற்கும், இரண்டாம் டோஸிற்குமான இடைவெளி, முதலில் 4 முதல் 6 வாரங்களாக இருந்தது. அதன் பின், 6 முதல் 8 வாரங்களாக மாற்றப்பட்டது.
தற்போது அதன் இடைவெளி 12 -16 வாரங்களாக இருக்கிறது. இந்நிலையில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசியைச் செலுத்தும் வகையில் இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம், அதன் இடைவெளியைக் குறைக்க மத்திய அரசுக்குப் பரிந்துரைந்துள்ளது.